விஜய் டிவியில் கடந்த 2018-2019-ல் ஒளிபரப்பான சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று அவளும் நானும்.இந்த தொடரின் ஹீரோயினாக தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் மௌனிகா தேவி.இந்த தொடரில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியவர் மௌனிகா தேவி.

இந்த தொடரில் நடித்து பட்டிதொட்டி எங்கும் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார் மௌனிகா.இதனை தொடர்ந்து கலைஞர் டிவியில் ஒளிபரப்பான பூவே செம்பூவே என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து அசத்தினார்.அடுத்ததாக தெலுங்கில் Bangaru Kodalu என்ற தொடரில் நடித்திருந்தார்.

இவற்றை தவிர சில படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார் மௌனிகா.சமீபத்தில் சன் டிவியின் சூப்பர்ஹிட் தொடரான மகராசி தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார் மௌனிகா.இந்த தொடரின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் மௌனிகா.

மௌனிகாவிற்கு இந்த மாத தொடக்கத்தில் நிச்சயதார்த்தம் முடிவடைந்தது.தற்போது இவரது திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்