தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். மாநகரம் & கைதி என வெற்றித் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்திருந்தார்.

தளபதி விஜய் ப்ரொபசர் ஜே.டி கதாபாத்திரத்தில் நடிக்க பவானி கதாபாத்திரத்தில் மிரட்டலான வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருந்தார். கொரோனா வைரஸ் தொற்று , ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட திரையரங்குகளை கடந்த பொங்கல் வெளியீடாக வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் திருவிழா கொண்டாட வைத்தது.

மாஸ்டர் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். அவரது இசையில் வெளிவந்த வாத்தி கம்மிங், குட்டி ஸ்டோரி , அந்த கண்ண பார்த்தா என அனைத்துப் பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. குறிப்பாக வாத்தி கம்மிங் பாடல் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் குத்தாட்டம் போட வைத்தது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் டேவிட் வார்னரின் குழந்தைகள் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ வெளியாகியுள்ளது. முன்னதாக புட்ட பொம்மா பாடலுக்கும் டேவிட் வார்னரின் குடும்பம் நடனமாடிய பாடல் வீடியோ வைரலான நிலையில் வாத்தி கம்மிங் பாடலுக்கு வார்னரின் குழந்தைகள் நடனமாடும் வீடியோவும் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.