ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ.தனது முதல் படத்திலேயே வெற்றிகண்ட இந்த இளைஞர் பலரையும் கவர்ந்திருந்தார்.அடுத்ததாக தளபதியுடன் தெறி,மெர்சல்,பிகில் என்று தனது ஒவ்வொரு படத்திலும் புதிய உச்சம் தொட்டார்.

Atlee Next Production With Arjun Das Andhaghaaram

இவர் இயக்கப்போகும் அடுத்த படத்தில் ஷாருக் கான் நடிக்கவுள்ளார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் உலாவி வருகிறது.இதனை தவிர A For Apple என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் ஜீவா நடித்த சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தை தயாரித்திருந்தார்.இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Atlee Next Production With Arjun Das Andhaghaaram

தனது தயாரிப்பில் உருவாகும் புதிய படம் குறித்த தகவலை இன்று வெளியிடுவதாக அட்லீ தெரிவித்திருந்தார்.இந்த படத்தில் தனது மனைவி ப்ரியா அட்லீயை இணை தயாரிப்பாளராக அறிமுகப்படுத்துகிறார்.கைதி,மாஸ்டர் படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் இந்த படத்தில் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார்.

Atlee Next Production With Arjun Das Andhaghaaram

இந்த படத்தில் பர்ஸ்ட்லுக் தற்போது வெளியாகியுள்ளது.அந்தகாரம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை விக்னராஜன் இயக்குகிறார்.பிரதீப் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ட்ரைலர் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.