நாட்டையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர அரசு தங்களால் முடிந்த வேலைகளை செய்து வருகின்றனர். கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

Atlee

ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு இருக்குமா ? அல்லது இயல்பு நிலை திரும்புமா என்ற ஏக்கத்தில் உள்ளனர் ரசிகர்கள். பலதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

atlee

இந்த வாரத்தில் துவக்கத்திலிருந்து திரைப் பிரபலங்கள் பலர் நிதியுதவி செய்து வருகின்றனர். தற்போது இயக்குனர் அட்லீ தன்னால் முடிந்த உதவியை செய்துள்ளார். இயக்குனர் சங்கத்திற்கு 5 லட்சம் ரூபாய், ஃபெப்சி யூனியனுக்கு 5 லட்சம் ரூபாய் என மொத்தம் 10 லட்சம் ரூபாய் தந்து உதவியுள்ளார். இயக்குனர் அட்லீயின் இச்செயலை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.