ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ.தனது முதல் படத்திலேயே வெற்றிகண்ட இந்த இளைஞர் பலரையும் கவர்ந்திருந்தார்.அடுத்ததாக தளபதியுடன் தெறி,மெர்சல்,பிகில் என்று தனது ஒவ்வொரு படத்திலும் புதிய உச்சம் தொட்டார்.

Atlee Andhagaaram Trailer on Apr 14 5pm Arjun Das

இதனை தவிர A For Apple என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் ஜீவா நடித்த சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தை தயாரித்திருந்தார்.இதனை தொடர்ந்து இவர் அந்தகாரம் என்ற படத்தை தயாரித்திருந்தார்.கைதி,மாஸ்டர் படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் இந்த படத்தில் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார்.

Atlee Andhagaaram Trailer on Apr 14 5pm Arjun Das

இந்த படத்தை விக்னராஜன் இயக்குகிறார்.பிரதீப் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் நேற்று வெளியானது.இந்த படத்தின் ட்ரைலர் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.