தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அதுல்யா ரவி. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் அடுத்த சாட்டை, கேப்மாரி போன்ற படங்கள் வெளியாகியது. இந்த ஆண்டு துவக்கத்தில் இவரது நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் 2 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து ஷாந்தனு நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் அதுல்யா. 

Athulyaravi

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நேரத்தில் மக்கள் தங்கள் பணிக்கு திரும்பாமல் அவதி படுகின்றனர். மே 3-ம் தேதி வரை அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நீட்டிக்குமா என்ற அச்சத்தில் உள்ளனர் பொதுமக்கள். திரைப்பிரபலங்களும் தங்கள் படப்பிடிப்பிற்கு செல்லாமல் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர். 

Athulya

இந்நிலையில் நடிகை அதுல்யா ரவி ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். படப்பிடிப்பு நாட்களை மிஸ் செய்வதாக அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த 2020-ம் ஆண்டில் கொரோனா பாசிட்டிவ் என்பது நெகட்டிவ் வார்த்தையாக கருதப்படுகிறது. ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.