தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அதுல்யா ரவி. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் அடுத்த சாட்டை, கேப்மாரி போன்ற படங்கள் வெளியாகியது. இந்த ஆண்டு துவக்கத்தில் இவரது நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் 2 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து ஷாந்தனு நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் அதுல்யா. 

சமூகவலைத்தளத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் அதுல்யாவுக்கு தற்போது புது சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை அதுல்யா ரவி தனது ட்விட்டர் பக்கத்தில், பேஸ்புக்கில் யாரோ ஒரு போலி ஐடியை உருவாக்கி, அதிலிருந்து தனிப்பட்ட முறையில் திரைப்படத் துறையில் எனக்குத் தெரிந்தவர்களுக்கு செய்தி அனுப்புவது ஏன்? என்று எனக்குத் தெரியவில்லை! இது முட்டாள்தனம். 

ஏற்கனவே அது குறித்து எனக்கு புகார்கள் வந்தன. நான் அதிகாரப்பூர்வமாக பேஸ்புக்கில் இல்லை என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதுல்யா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் முருங்கைக்காய் சிப்ஸ். ஷாந்தனு நாயகனாக நடிக்கும் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி பட்டையை கிளப்பியது. தரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்ரீஜர் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஷாந்தனுவின் தந்தையும் பிரபல இயக்குனருமான பாக்யராஜ் முக்கிய ரோலில் நடித்துள்ளார். 

லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக ரவீந்தர் சந்திரசேகர் மற்றும் ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சார்பாக சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். யோகிபாபு, ஊர்வசி, மனோபாலா, பிக்பாஸ் ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.