கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த சூழலில் தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. நோய் வேகமாக பரவாமல் காத்துக்கொள்ளவும் இந்த நடிவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது. இதுகுறித்து திரை பிரபலங்களும் தங்களால் முடிந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Athulya

ஊரடங்கு உத்தரவின் 5-ம் நாளில் நடிகை அதுல்யா ரவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது சகோதரர் உடன் முடியை பிடித்து சண்டை போடுகிறார். அய்யோ 5-வது நாளே நானும் எனது தம்பியும் சண்டை போட ஆரம்பித்து விட்டோம் என்ற நகைச்சுவையான பதிவை பதிவிட்டுள்ளார். 

AthulyaRavi

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் அதுல்யா ரவி. இவரது நடிப்பில் கடைசியாக நாடோடிகள் 2 திரைப்படம் வெளியானது. அடுத்ததாக நடிகர் ஷாந்தனுவுடன் நடிக்கவுள்ளார். லிப்ரா தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது.