அதர்வா நடிப்பில் இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தள்ளி போகாதே. தெலுங்கில் வெளியாகி ஹிட்டான நின்னு கோரி படத்தின் தமிழ் ரீமேக்காகும். அதர்வாவிற்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். மேலும் முக்கிய ரோலில் அமிதாஷ் பிரதான் அசத்தியிருக்கிறார். 

atharva

மசாலா பிக்ஸ் மற்றும் எம்.கே.ஆர்.பி புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஷண்முக சுந்தரம் காட்சிகள் அமைத்துள்ளார். கபிலன் வைரமுத்து வசனம் எழுதியுள்ளார். இறுதிகட்ட படப்பிடிப்பு அசர்பைஜானில் சமீபத்தில் நடந்து முடிந்தது. 

atharva thallipogathey

தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியது. இளைஞர்கள் விரும்பும் காதல் காவியமாக இப்படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதர்வா கைவசம் ஒத்தைக்கு ஒத்த மற்றும் குருதி ஆட்டம் போன்ற படங்கள் ரிலீஸ் பட்டியலில் உள்ளது.