தளபதியோட ஒரு மாஸ்டர் போட்டோ ! வைரலாகும் அதர்வா புகைப்படம்
By Aravind Selvam | Galatta | April 20, 2020 18:16 PM IST

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கியுள்ளார்.இந்த படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
இவரது மகளும் இயக்குனருமான சினேகா பிரிட்டோ மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார்.இவர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளியை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.இவர்களது நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன் நடந்தது.
இதில் விஜய் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்தன.இதனை தொடர்ந்து விஜயின் மாஸ்டர் ஆடியோ லாஞ்சில் அதர்வா கலந்துகொண்டார்.தற்போது அதர்வா தளபதி விஜயுடன் நிச்சயதார்த்த விழாவில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துகொண்டார்.இது சமூகவலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.விஜயின் புதிய புகைப்படத்தை உற்சாகத்துடன் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
All smiles ! ✨ pic.twitter.com/h7MRE9ij0L
— Atharvaa (@Atharvaamurali) April 20, 2020
Coronavirus | Telangana becomes first Indian state to extend lockdown till May 7
20/04/2020 04:32 PM