பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி தொடர்ந்து முப்பொழுதும் உன் கற்பனைகள் இயக்குனர் பாலாவின் பரதேசி, ஈட்டி, இமைக்கா நொடிகள் என வரிசையாக பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்த நடிகர் அதர்வா நடிப்பில் கடைசியாக சமீபத்தில் வெளியான திரைப்படம் குருதி ஆட்டம்.

8 தோட்டாக்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்த குருதி ஆட்டம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அதர்வா நடிப்பில் அட்ரஸ், ஒத்தைக்கு ஒத்த, நிறங்கள் மூன்று, ருக்மணி வண்டி வருது என வரிசையாக திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் அதர்வா நடிப்பில் ஆக்சன் த்ரில்லர் படமாக தயாராகியுள்ள திரைப்படம் ட்ரிக்கர். இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வாவுடன் இணைந்து தான்யா ரவிச்சந்திரன், அருண்பாண்டியன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்துள்ள ட்ரிக்கர் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

பிரமோத் பிலிம்ஸ் மற்றும் மிராக்கல் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள ட்ரிக்கர் திரைப்படத்தை SP சினிமாஸ் வெளியிடுகிறது. ட்ரிக்கர் திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் அதர்வாவின் ட்ரிக்கர் படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் தற்போது வெளியானது. அந்த ட்ரைலர் இதோ…