கடந்த வருடம் 2019 அக்டோபர் 4-ம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் அசுரன். 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய ஹிட்டானது. மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலை கொண்டு இந்த படம் உருவானது.

Asuran

தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக்காகிறது. கலைப்புலி எஸ்.தாணு மற்றும் சுரேஷ் ப்ரோடக்ஷன்ஸ் சேர்ந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். தனுஷ் நடித்த வேடத்தில் வெங்கடேஷும், மஞ்சு வாரியர் நடித்திருந்த வேடத்தில் பிரியாமணியும் நடிக்கின்றனர். ஸ்ரீகாந்த் அட்டலா இந்த படத்தை இயக்கி வருகிறார்.

Narappa SureshProduction

படப்பிடிப்பு பணிகள் கொரோனாவின் அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழு தற்போது ஹைதராபாத் திரும்பியுள்ளதாகவும் சுரேஷ் ப்ரோடக்ஷன்ஸ் ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர். நிலைமை சரியானதும் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும். பொது இடங்களில் மக்கள் அதிகம் ஒன்று கூடுவதை தவிர்ப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள் என்று அக்கறையுடன் பதிவு செய்துள்ளனர்.