தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன்.பொல்லாதவன்,ஆடுகளம்,வடசென்னை படங்களின் ப்ளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

Asuran Chinese Remake Rumour Denied By Producer

மஞ்சு வாரியர்,பசுபதி,ஆடுகளம் நரேன்,கென் கருணாஸ்,டீஜே,பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு இந்த படத்தை தயாரித்துள்ளார்.

Asuran Chinese Remake Rumour Denied By Producer

கடந்த வருடத்தின் பெரிய ஹிட் படங்களில் ஒன்றான இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகி வருகிறது.இதனை தொடர்ந்து சீன மொழியிலும் இந்த படம் ரீமேக் ஆக உள்ளது என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிடம் விசாரித்தபோது சீனாவின் இந்த படம் ரீமேக் ஆகிறது என்ற செய்தி வதந்தி தான் என்பதை தெளிவுபடுத்தினார்.மேலும் அசுரன் படத்தை சீன மொழியில் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும்,கன்னட மொழியில் இந்த படம் விரைவில் ரீமேக் செய்யப்படவுள்ளது என்றும் அதனை வெற்றிமாறனின் உதவி இயக்குனர் இயக்குவார் என்றும் தெரிவித்தார்.

Asuran Chinese Remake Rumour Denied By Producer