இந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகர்களின் பட்டியலில் முன்னணி இடத்தை பிடித்து, கோலிவுட் -பாலிவுட் தாண்டி ஹாலிவுட் வரை தன் சிறந்த நடிப்பாலும் கடின உழைப்பாலும் மிகப்பெரிய உச்சங்களை தொட்ட தமிழ் சினிமாவின் பொக்கிஷம் நடிகர் தனுஷ். தொடர்ந்து தனுஷின் அடுத்தடுத்த திரைப்படங்கள் திரையுலகை அதிர வைக்க தயாராகி வருகின்றன.

முன்னதாக பாலிவுட்டில் நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்து நடிகர் தனுஷ் நடித்துள்ள அட்றங்கி ரே, ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் படத்தை இயக்கிய இயக்குனர்கள் ரூசோ சகோதரர்களின் இயக்கத்தில் தி க்ரே மேன், துருவங்கள் 16 படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.

மேலும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்களின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகும் திருச்சிற்றம்பலம் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் தனுஷ். கதாநாயகிகளாக நித்யாமேனன், ப்ரியா பவானி சங்கர் மற்றும் ராஷி கண்ணா நடிக்க பிரகாஷ் ராஜ் மற்றும் இயக்குனர் இமயம் பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். பரபரப்பாக நடைபெற்று வரும் திருச்சிற்றம்பலம் படத்தின் படபிடிப்பில் மீண்டும் சேர்ந்தது அசுரன் கூட்டணி. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்த நடிகர் கென் கருணாஸ் திருச்சிற்றம்பலம் திரைப்படத்திலும் தனுஷுடன் இணைந்து நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியானது. இதனையடுத்து அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

asuran actor ken karunas joins in sets of dhanush thiruchitrambalam shoot