விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் அஷ்வின் குமார்.இதற்கு முன் சீரியல்கள்,ஆல்பம் பாடல்கள்,படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த அஷ்வின்.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார்.

இந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து இவர் நடித்த ஆல்பம் பாடல்கள் பெரிய வெற்றியை அடைந்தன.அடுத்ததாக Trident Arts நிறுவனம் தயாரிப்பில் ஹீரோவாகும் வாய்ப்பை பெற்றார் அஷ்வின்.என்ன சொல்ல போகிறாய் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அஷ்வினின் பேச்சு பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.அதற்காக அவர் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸை ஜனவரி 2022க்கு ஒத்திவைப்பதாக படத்தின் இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அஷ்வினும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் முதல் படம் தள்ளிப்போவது குறித்து தெரிவித்துள்ளார்.படத்தின் ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ashwin kumar enna solla pogirai postponed to jan 2022 pugazh teju avantika