பிரபல மாடலாக இருந்து பின்னர் ஓகே கண்மணி உள்ளிட்ட சில திரைப்படங்களில் சில கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர் அஷ்வின்.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரெட்டைவால் குருவி,நினைக்க தெரிந்த மனமே உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறினார் அஷ்வின்.

இதனை தொடர்ந்து தற்போது விஜய் டிவியை கலக்கி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றிருந்தார்.இந்த தொடரின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார் அஷ்வின்.இந்த தொடரின் மூலம் கனவுகண்ணனாக விரைவில் உருவெடுத்தார் அஷ்வின்.

இவர் குக் வித் கோமாளி சீசன் 2 போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தினார்.இவரது குட்டி பட்டாஸ்,கிரிமினல் க்ரஷ்,Loner உள்ளிட்ட ஆல்பம் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இதனை தொடர்ந்து trident ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்ன சொல்ல போகிறாய் படத்தில் அஸ்வின் நடித்து வருகிறார்.

தற்போது அஷ்வின் தெலுங்கு அந்தோலஜி படம் ஒன்றில் ஹீரோவாக நடித்துள்ளதை தெரிவித்துள்ளார்.தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நானி இந்த படத்தை தயாரித்துள்ளார்.அஷ்வினுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ashwin kumar completes shooting for meet cute telugu anthology film nani