இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பலரது முதல் திரைப்பட கனவை நனவாக்கியவரும் சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவருமான தயாரிப்பாளர் C.V.குமார் அவர்கள் தனது திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பல சிறந்த திரைப்படங்களை தமிழ் திரையுலகிற்கு வழங்கி வருகிறார்.  

முன்னதாக இயக்குனர் பா.ரஞ்சிதின் முதல் படைப்பான அட்டகத்தி, ராட்சசன் இயக்குனர் ராம்குமாரின் முதல் படமான முண்டாசுப்பட்டி, இயக்குனர் நலன் குமாரசாமியின் முதல் படமான சூதுகவ்வும், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் முதல் படமான பீட்சா ஆகிய திரைப்படங்கள் இயக்குனர் தயாரிப்பாளர் CV.குமார் அவர்கள் தயாரித்து தான்.

குறிப்பாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த பீட்சா திரைப்படம் குறைந்த பொருட்செலவில் மிக திகிலான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கியது. தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் பீட்சா 2 திரைப்படமும் வெளிவந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது வெளிவருகிறது பீட்சா 3 தி மம்மி திரைப்படம்.

பீட்சா 3 தி மம்மி திரைப்படத்தில் நடிகர் அஸ்வின் & நடிகை பவித்ரா மாரிமுத்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்க, நடிகர்கள் கௌரவ் நாராயணன், அபிஷேக், காளி வெங்கட், அனுபமா குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இயக்குனர் மோகன் கோவிந்த் இயக்கத்தில், பிரபு ராகவ் ஒளிப்பதிவில் அருண்ராஜ் இசையமைத்திருக்கும் பீட்சா 3 தி மம்மி படத்தையும் தயாரிப்பாளர் CV.குமார் தயாரித்திருக்கிறார். இந்நிலையில் இன்று பீட்சா 3 தி மம்மி படத்தின் டீசர் வெளியானது. த்ரில்லானா பீட்சா 3 தி மம்மி டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.