அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான படம் ஓ மை கடவுளே. அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்கினார். ஷாரா, எம்.எஸ். பாஸ்கர், கஜராஜ், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்தனர். தொலைக்காட்சி புகழ் நடிகை வாணி போஜன் இந்த படத்தில் அறிமுகமாகியிருந்தார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபாக்டரி இப்படத்தை தயாரித்தது. சமீபத்தில் திரைக்கு வந்த இப்படம் வெற்றி நடை போட்டது. 

OhMyKadavule

இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார். விது அய்யனா ஒளிப்பதிவு செய்தார். 
மேலும் இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கடவுள் வேடத்தில் நடித்து அசத்தினார். கெஸ்ட் ரோலாக இருந்தாலும் படத்திற்கு பக்க பலமாக இருந்தது. 

OhMyKadavule OhMyKadavule

இந்நிலையில் இயக்குனர் அஸ்வத் மாரித்து தனது ட்விட்டரில் சிறப்பான பதிவை செய்துள்ளார். ஓ மை கடவுளே படத்தின் 50-வது நாளான இன்று படம் பற்றியும், படக்குழுவினர் பற்றியும் நெகிழ்ச்சியான பதிவை பகிர்ந்துள்ளார். திரைப்படத்தை உருவாக்குவது மேஜிக். பலர் வருடக்கணக்கில் ஒன்றினைந்து 2 மணிநேர படமாக மாற்றியுள்ளீர்கள். இதனை ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.