அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் நடித்துள்ள படம் ஓ மை கடவுளே. மேலும் இந்தப் படத்தில் பிரபல தொலைக்காட்சி நடிகை வாணி போஜனும் இணைந்திருந்தார். இவர்களுடன் கௌரவ பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். அக்சஸ் ஃபிலிம் ஃபாக்டரி இப்படத்தை தயாரிக்கிறது.

ashokselvan ashokselvan

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்றது. படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். விது அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டது. பிரண்ட்ஷிப் ஆன்தம், ஹய்யோ ஹய்யோ, கதைப்போமா இந்த மூன்று பாடல்களின் லிரிக் வீடியோ வெளியாகி ஈர்த்தது. 

ashokselvan ashokselvan

இந்த படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை ஏ.பி.இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என சமீபத்தில் தகவல் தெரியவந்தது. பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று திரைக்கு வரும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது படத்தின் ட்ரைலர் வெளியானது.