தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய இளம் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன்.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தை அஸ்வந்த் மாரிமுத்து இயக்கியிருந்தார்.

Ashok Selvan Niharika Film Launched With A Pooja

இதனை தொடர்ந்து அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்வாதினி இயக்குகிறார்.லியோன் ஜேம்ஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.ஒரு நல்ல நாள் பாத்துச்சொல்றேன் படத்தில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக நடித்த நிஹாரிகா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

Ashok Selvan Niharika Film Launched With A Pooja

கெனன்யா பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது, இதில் இயக்குனர் ஸ்வாதினி,லியோன் ஜேம்ஸ் தயாரிப்பாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.லாக்டவுன் முடிந்த பிறகு இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.