தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக தொடர்ந்து பல விதமான கதாபாத்திரங்களில் வெரைட்டியான திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் அசோக் செல்வன். அந்த வகையில் அசோக் செல்வன் நடிப்பில் இந்த ஆண்டில் (2022) வரிசையாக சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மதலீலை, ஹாஸ்டல் மற்றும் வேழம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றன.

இந்த வரிசையில் அடுத்ததாக அறிமுக இயக்குனர் Ra.கார்த்திக் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகியுள்ள திரைப்படம் நித்தம் ஒரு வானம். வீரா, அர்ஜுன், பிரபா என மூன்று கதாபாத்திரங்களில் அசோக்செல்வன் நடித்துள்ள நித்தம் ஒரு வானம் திரைப்படத்தில் ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷ்வதா, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் கதாநாயகிகளாக முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

தமிழில் நித்தம் ஒரு வானம், தெலுங்கில் ஆகாஷம் என்ற பெயரில் தயாராகியுள்ள, இப்படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ளார். வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள நித்தம் ஒரு வானம் திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.

முன்னதாக சில தினங்களுக்கு முன் வெளியான நித்தம் ஒரு வானம் திரைப்படத்தின் டீசர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் நித்தம் ஒரு வானம் திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 4-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

FINALLY! - #NithamOruVaanam / #Aakasam releasing this November 4th. This film is special and you’re going to LOVE it 😎

Teaser - https://t.co/c90dbmK0D0 pic.twitter.com/mdjjVbhHzi

— Ashok Selvan (@AshokSelvan) October 4, 2022