தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மன்மத லீலை. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மன்மதலீலை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

முன்னதாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் நித்தம் ஒரு வானம் மற்றும் ஆகாசம் ஆகிய திரைப்படங்களில் அசோக்செல்வன் நடித்து வருகிறார். இந்த வரிசையில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான அடி கப்பயர கூட்டமணி படத்தின் தமிழ் ரீமேக்காக அசோக்செல்வன் நடித்துள்ள திரைப்படம் ஹாஸ்டல். 

இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன் உடன் இணைந்து பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க, சதீஷ், நாசர், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ஹாஸ்டல் படத்திற்கு பிரவீன்குமார் ஒளிப்பதிவு செய்ய, போபோ ஷஷி இசையமைத்துள்ளார். 

வருகிற ஏப்ரல் 28-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள ஹாஸ்டல் திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது ஹாஸ்டல் திரைப்படத்திலிருந்து புதிய Sneak Peek வீடியோ வெளியானது. கலக்கலான அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.