தமிழ் திரையுலகில் இளம் கதாநாயகர்களில் ஒருவர் அசோக் செல்வன். சூதுகவ்வும், பீட்சா II, தெகிடி, கூட்டத்தில் ஒருவன், சவாலே சமாளி போன்ற படங்களில் சீரான நடிப்பை வெளிப்படுத்தினார். இன்று வரை இவர் நடித்த தெகிடி படத்திற்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சமீபத்தில் இவர் நடிப்பில் ஓ மை கடவுளே திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. 

AshokSelvan

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நேரத்தில் மக்கள் தங்கள் பணிக்கு திரும்பாமல் அவதி படுகின்றனர். குறிப்பாக முடி திருத்தம், ஃபேஷியல் போன்ற விஷயங்களுக்கு சலூன் செல்லாமல் வீட்டிலே இருந்து வருகின்றனர். திரைப்பிரபலங்களும் தங்கள் படப்பிடிப்பிற்கு செல்ல இயலாமல் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ளனர். 

AshokSelvan

இந்நிலையில் அசோக் செல்வன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். வீட்டில் இருக்கும் உறவினருக்கு முடி வெட்டி விடுகிறார். அப்பதிவில், வெப் சீரிஸ் கதாபாத்திரம் தாமஸ் ஷெல்பிக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் ஊனுக்கு இடையில் ஒரு கட்டிங். என்ன நினைக்கிறீர்கள்.? என பதிவு செய்துள்ளார். அசோக் செல்வனின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.