ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் டெடி. இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். 

teddy

திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து நடிக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடைசியாக ஆர்யா மற்றும் சாயிஷா காப்பான் படத்தில் நடித்திருந்தனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் போய் கொண்டிருக்கிறது. 

arya

இறுதியாக என் இனிய தனிமையே பாடல் வெளியாகி பட்டையை கிளப்பியது. தற்போது படத்திலிருந்து நண்பியே பாடல் வெளியானது. ராக்ஸ்டார் அனிருத் பாடிய இந்த பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.