தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் ஆர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் டெடி. இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் டிவி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவரவுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை.வடசென்னையில் 1980-களில் நடைபெறும் குத்துச்சண்டை கலாச்சாரத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடிகர் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். மேலும் துஷாரா விஜயன், அனுபமா குமார், சஞ்சன நடராஜன், கலையரசன், ஜான் விஜய், காளி வெங்கட் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடிகர் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

ஒளிப்பதிவாளர் முரளி.ஜி ஒளிப்பதிவு செய்துள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். நீலம் புரோடக்சன்ஸ் மற்றும் K9 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகிறது. வருகிற ஜூலை 22-ஆம் தேதி நேரடியாக சார்பட்டா பரம்பரை திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசாகிறது.

இன்னிலையில் சார்பட்டா பரம்பரை திரைப்படத்திலிருந்து புதிய பாடல் ஒன்று வெளியானது. வம்புல தும்புல என்ற குத்து பாடல் வெளியாகி ரசிகர்களை ஆட்டம் போட வைக்கிறது. குத்துச்சண்டை வீரராக கபிலன் கதாப்பாத்திரத்தில் நடிகர் ஆர்யா குத்தாட்டம் போடும் இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.