அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பா.ரஞ்சித் தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிகர் கலையரசன் இணைந்து நடித்து வெளிவந்த மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் கவனிக்கப்படும் இயக்குனராக வளர்ந்தார்.

இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்ற பா.ரஞ்சித் கபாலி & காலா என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கினார். தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலையும் அவர்களுக்கான நீதியையும் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்ததாக சார்பட்டா பரம்பரை படம் தயாராகி வருகிறது.

நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் K9 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் ஆர்யா மிரட்டலான குத்து சண்டை வீரர் கதாப்பாத்திரத்தில்  கதாநாயகனாக நடிக்க நடிகைகள் துஷாரா விஜயன், சஞ்சனா நடராஜன், அனுபமா குமார் இவர்களோடு நடிகர் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

கபாலி & காலா உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் முரளி.ஜி ஒளிப்பதிவு செய்ய முன்னணி இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். முன்னதாக சார்பட்டா பரம்பரை படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது

இந்நிலையில் தற்போது இப்படத்தின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. சார்பட்டா பரம்பரை படத்தின் இறுதிகட்ட பணிகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது சார்பட்டா பரம்பரை படத்தின் சவுண்ட் மிக்சிங் நிறைவு பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வஅறிவிப்பு வெளியானது. எனவே விரைவில் படத்தின் டீசர்,ட்ரெய்லர் மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.