சமய சண்டைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’.. – படக்குழு வெளியிட்ட புது வீடியோ உள்ளே

ஆர்யாவின் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் சிறப்பு காட்சி வீடியோ இதோ - Arya Kathar basha muthuramalingam movie sneak peek out now | Galatta

மண் சார்ந்த கதைகளை பக்கா கமர்ஷியல் பேக் திரைப்படமாக உருவாக்கி தமிழ் ரசிகர்களை பல ஆண்டுகளாக உற்சாகப் படுத்தி வரும் இயக்குனர் முத்தையா. அவரது முதல் திரைப்படம் குட்டி புலி படத்தை தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான ‘விருமன்’ திரைப்படம் வரை ரசிகர்களின் வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்று தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். அதன்படி தற்போது இயக்கி வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ .முதல் முறையாக ஆர்யா கிராமத்து கதையில் ஆக்ஷன் அதிரடி நாயகனாக இப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இவருக்கு ஜோடியாக வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்த நாயகி சித்தி இதானி நடித்துள்ளார். இவர்களுடன் இளைய திலகம் பிரபு, தமிழ், ஆடுகளம் நரேன், பாக்ய ராஜ், சிங்கம் புலி, மதுசூதன ராவ், அவினாஷ், விஜய் முருகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். ஜி ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன் இணைந்து தயாரித்த இப்படத்தில் ஒளிப்பதிவாளர் R வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய வெங்கட் ராஜன் படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு ஜிவி பிரகாஷ் ராஜ் இசையமைத்துள்ளார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் இப்படம் கடந்த ஜூன் 2 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களின் கொண்டாட்டதுடன் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் முக்கியமான காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜனநாயகம் முறைப்படி ஊர் தேர்தல் நடைபெற வேண்டும் என்று ஜமாத் தலைவர் பிரபு வலியுறுத்த அதை ஆடுகளம் நரேன் தரப்பினர் எதிர்க்கின்றனர். சமயம் சார்ந்து பிரச்சனையை உருவாக்க நினைப்பவருக்கு அசத்தலான வசனங்களுடன்  ஆர்யா பேசும் காட்சி தற்போது ரசிகர்களால் வைரலாகி வருகிறது.  

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் அபிப்ராயத்தை பெற்ற நடிகராக வலம் வரும் ஆர்யா தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக தயாராக இருக்கும் சங்கமித்ரா படத்தில் ஆர்யா நடிக்க இருக்கிறார் இப்படத்தின் அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது இதனை அடுத்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை மையப்படுத்தி உருவாகும் சார்பட்டா பரம்பரை 2 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'இது ஒரு நிறக்குருடு!' வில்லன்களுக்கு CLASS எடுக்கும் யோகி பாபு... சித்தார்த்தின் டக்கர் பட கலகலப்பான SNEAK PEEK வீடியோ இதோ!
சினிமா

'இது ஒரு நிறக்குருடு!' வில்லன்களுக்கு CLASS எடுக்கும் யோகி பாபு... சித்தார்த்தின் டக்கர் பட கலகலப்பான SNEAK PEEK வீடியோ இதோ!

மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் திருமணம் குறித்து கேள்வி.. - மாஸ் ரிப்ளே கொடுத்த கீர்த்தி சுரேஷ் ..! – வைரல் வீடியோ உள்ளே..
சினிமா

மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் திருமணம் குறித்து கேள்வி.. - மாஸ் ரிப்ளே கொடுத்த கீர்த்தி சுரேஷ் ..! – வைரல் வீடியோ உள்ளே..

“மாமன்னன் என் கடைசி திரைப்படம்..?”  இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த உதயநிதி ஸ்டாலின் – வைரல் வீடியோ உள்ளே..
சினிமா

“மாமன்னன் என் கடைசி திரைப்படம்..?” இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த உதயநிதி ஸ்டாலின் – வைரல் வீடியோ உள்ளே..