மகாமுனி படத்தின் எதார்த்தமான காட்சி வெளியீடு !
By Aravind Selvam | Galatta | September 09, 2019 11:21 AM IST

Studio Green நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மகாமுனி.மௌனகுரு படத்தை இயக்கிய சாந்தகுமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.ஆர்யா இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் ஹீரோயினாக மஹிமா நம்பியார் மற்றும் இந்துஜா நடித்துள்ளனர்.இந்த படம் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.ஆர்யா இரட்டை வேடங்களில் நடிப்பில் வித்தியாசம் காட்டியிருக்கிறார் என்று விமர்சகர்களும் படத்தை பாராட்டியுள்ளனர்.
திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுவரும் இந்த படத்தின் முக்கிய காட்சி ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.ஆர்யா மற்றும் இந்துஜா இடையே நடக்கும் இந்த எதார்த்த குடும்ப காட்சி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.