ரிலீஸுக்கு ரெடியான ஆர்யாவின் ACTION PACKED காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்… சென்சார் குறித்த அதிரடி அறிவிப்பு இதோ!

ஆர்யாவின் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் பட சென்சார் அறிக்கை வெளியீடு,arya in kathar basha endra muthuramalingam movie censored with ua | Galatta

தனது கொம்பன், மருது, விருமன் வரிசையில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தின் சென்சார் அறிக்கை வெளியானது. தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ஆர்யா அடுத்ததாக தனது திரைப்பயணத்தின் மிக முக்கிய படமாக அமைந்த சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாராகும் சார்பட்டா 2 திரைப்படத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் சார்பட்டா 2 பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் விரைவில் அடுத்த கட்ட அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து பிரம்மாண்ட படைப்பாக தயாராக இருக்கும் சங்கமித்ரா படத்தில் ஆர்யா நடித்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் சுந்தர்.சி இயக்கத் திட்டமிட்டிருந்த சங்கமித்ரா திரைப்படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது. இந்த நிலையில், தற்போது அத்திரைப்படத்தை மீண்டும் இயக்குனர் சுந்தர்.சி கையில் எடுத்திருப்பதும், இந்த படத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான FIR திரைப்படத்தின் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் Mr.X திரைப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். சர்தார் படத்தின் தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் Mr.X படத்தில் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதனிடையே முதல்முறையாக இயக்குனர் M.முத்தையா இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம். வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகி சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்க, இளைய திலகம் பிரபு, பாக்யராஜ், சிங்கம் புலி, ஆடுகளம் நரேன், தமிழ், மதுசூதன ராவ், அவினாஷ், RK.விஜய் முருகன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ஜி ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவில், வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்ய, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்டண்ட் இயக்குனர் அனல் அரசுவின் அதிரடி ஆக்ஷனில் உருவாகி இருக்கும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்திற்கு பாபா பாஸ்கர் ஷோபி, சாண்டி, ஜானி, சதீஷ் மற்றும் ஷெரிப் ஆகியோர் நடன இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர்.  சமீபத்தில் வெளிவந்த காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படம் வருகிற ஜூன் இரண்டாம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் வழக்கமான கிராமத்து பின்னணியில் பக்கா ACTION PACKED படமாக வரும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்திற்கு சென்சாரில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு இதோ…
 

And it's here!
U/A Certification for Our #KatharbashaEndraMuthuramalingam 💥#KEMOnJUNE2 #KEMTheMovie@arya_offl @dir_muthaiya @SiddhiIdnani @gvprakash @VelrajR @zeestudiossouth @DrumsticksProd @jungleemusicSTH @ActionAnlarasu @Kirubakaran_AKR @ertviji @venkatraj11989 pic.twitter.com/w8rMY8G540

— Drumsticks Productions (@DrumsticksProd) May 30, 2023

'நயன்தாராவை IMPRESS பண்ண என்ன செய்தீர்கள்?'- சுவாரஸ்யமாக பதிலளித்த விக்னேஷ் சிவனின் வைரல் வீடியோ இதோ!
சினிமா

'நயன்தாராவை IMPRESS பண்ண என்ன செய்தீர்கள்?'- சுவாரஸ்யமாக பதிலளித்த விக்னேஷ் சிவனின் வைரல் வீடியோ இதோ!

'சூப்பரா ஆடுனாரு!'- ARரஹ்மானுடன் இணைந்து மாமன்னன் பட ஜிகு ஜிகு ரயில் பாடலில் நடனமாடிய சேட்டைகள் பற்றி பேசிய சுட்டிகள்! ட்ரெண்டிங் வீடியோ
சினிமா

'சூப்பரா ஆடுனாரு!'- ARரஹ்மானுடன் இணைந்து மாமன்னன் பட ஜிகு ஜிகு ரயில் பாடலில் நடனமாடிய சேட்டைகள் பற்றி பேசிய சுட்டிகள்! ட்ரெண்டிங் வீடியோ

'நயன்தாராவை வைத்து ROMANTIC SCENE எடுக்கும் போது..!'- இருவரில் யார் POSSESSIVE என்ற கேள்விக்கு விக்னேஷ் சிவனின் செம்ம பதில்! வீடியோ இதோ
சினிமா

'நயன்தாராவை வைத்து ROMANTIC SCENE எடுக்கும் போது..!'- இருவரில் யார் POSSESSIVE என்ற கேள்விக்கு விக்னேஷ் சிவனின் செம்ம பதில்! வீடியோ இதோ