டெடி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 2-வது முறையாக நடிகர் ஆர்யா மற்றும் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன். விசித்திரமான கொடூர விலங்கு படத்தின் போஸ்டரில் இடம் பெற்றிருப்பதால் சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் படமாக வெளிவரும் கேப்டன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள கேப்டன் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற செப்டம்பர் 8ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. யுவா ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்ய கேப்டன் படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

ஆர்யாவுடன் இணைந்து ஐஸ்வர்யா லெக்ஷ்மி கதாநாயகியாக நடிக்க, சிம்ரன், காவியா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத்ராஜ் உள்ளிட்டோர் கேப்டன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து கேப்டன் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

கேப்டன் திரைப்படத்திற்காக பல சவாலான ஆக்சன் காட்சிகளில் நடிகர் ஆர்யா மிகுந்த சிரத்தையோடு நடித்துள்ளார். அந்தவகையில் மூணாரில் உள்ள ஏரியில் 120 அடி உயரத்தில், டிசம்பர் மாத குளிரில், மழையில் நனைந்தபடி நடைபெற்ற படப்பிடிப்பில் அதிக ரிஸ்க் எடுத்து ஆர்யா நடித்துள்ளதாக தெரிவித்து இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் கேப்டன் படத்தின் அந்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ…

 

#Ninaivugal! It wasn't attempt to murder! It was abetting suicide! No other artist would have taken the risk you've taken for this episode @arya_offl bro! Shooting for 4 days, hanging 120 feet in the air, with rain effect in Munnar during the December winter!🔥👏Pics coming up! https://t.co/fVkzLfjG2S

— Shakti Soundar Rajan (@ShaktiRajan) July 28, 2022

My Munnar schedule #Ninaivugal with my bro @arya_offl!! Beast Mode! 🙏🙏👏👏👏🔥🔥 pic.twitter.com/nRLwFaOfLE

— Shakti Soundar Rajan (@ShaktiRajan) July 28, 2022