தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ஆர்யா, கடந்த ஆண்டில் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் டெடி, இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை இயக்குனர் சுந்தர்.சி-யின் அரண்மனை 3, இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் எனிமி ஆகிய திரைப்படங்கள் வெளிவந்து சூப்பர் ஹிட்டாகின.

அடுத்ததாக இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் ஆர்யா நடித்து வருகிறார். மேலும் தற்போது வெப் சீரிஸிலும் களமிறங்கியுள்ள ஆர்யா நடித்துள்ள தி வில்லேஜ் வெப்சீரிஸ் விரைவில் அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸாகவுள்ளது. இந்த வரிசையில் அடுத்ததாக ஆர்யா நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் கேப்டன்.

மீண்டும் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள கேப்டன் திரைப்படத்தை திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி கதாநாயகியாக நடிக்க, சிம்ரன், காவியா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத்ராஜ் உள்ளிட்டோர் கேப்டன் திரைப்படத்தில்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

கேப்டன் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் ரிலீசாகவுள்ள கேப்டன் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. யுவா ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்ய கேப்டன் படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கேப்டன் திரைப்படத்தின் முதல் பாடல் நாளை (ஜூலை 25ஆம் தேதி) மாலை 7 மணிக்கு வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Very excited for this combo again @immancomposer @ShaktiRajan @madhankarky 😍😍😍#CaptainFirstSingle from July 25th at 7 PM 👍👍👍@SimranbaggaOffc #AishwaryaLekshmi @immancomposer @tkishore555 @ThinkStudiosInd @RedGiantMovies_ @Udhaystalin @thinkmusicindia @ZEE5Tamil @ZeeTamil pic.twitter.com/Z4AOgbmzZV

— Arya (@arya_offl) July 23, 2022