படத்திற்கு படம் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் ஆர்யா நடிப்பில் த்ரில்லர் வெப் சீரிஸாக தயாராகியிருக்கும் தி வில்லேஜ் வெப்சீரிஸ் விரைவில் அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸாகவுள்ளது. இதனை தொடர்ந்து இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் புதிய படத்தில் தற்போது நடித்து வருகிறார் ஆர்யா.

இதனிடையே நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் & டெடி என தொடர்ந்து ரசிகர்களை கவரும் திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் கேப்டன். சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் கேப்டன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருக்கும் கொடூரமான விலங்கு திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேப்டன் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி கதாநாயகியாக நடிக்க, சிம்ரன், காவியா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள கேப்டன் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற செப்டம்பர் 8ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யுவா ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்ய கேப்டன் படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். கேப்டன் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் கேப்டன் திரைப்படத்தின் முதல் பாடலாக நினைவுகள் பாடல் தற்போது வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ள கேப்டன் படத்தின் நினைவுகள் பாடல் இதோ…