தமிழ் திரையுலகில் நல்ல நண்பர்களாக திகழ்பவர்கள் ஆர்யா மற்றும் விஷால். இருவரும் சேர்ந்து தற்போது ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் எனிமி படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் பாக்ஸிங் கிளாஸுக்கு வராத விஷால் குறித்து கிண்டலாக பதிவு ஒன்றை செய்துள்ளார் ஆர்யா. 

பாக்ஸிங் செய்தபடி ஆர்யா பகிர்ந்த வீடியோவில் நடிகையும், விஷாலின் அண்ணியுமான ஸ்ரியா ரெட்டி, நானும் இதே போல் பாக்ஸிங் செய்ய வேண்டும் என்று கமெண்ட் செய்தார். அதற்கு பதிலளித்த ஆர்யா, நிச்சயமாக நீங்க வரலாம். வரும் போது விஷாலையும் உடன் அழைத்து வாருங்கள். தினமும் காலை விஷாலை எழுப்ப முயற்சிக்கிறோம் என்று கிண்டலடித்துள்ளார். 

பா. ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை எனும் படத்தில் நடித்துள்ளார் ஆர்யா. இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நேற்றுடன் நிறைவடைந்தது. சார்பட்டா பரம்பரை படத்தில் வடசென்னையில் இருக்கும் பாக்ஸர்களை மையப்படுத்தி கதை உருவாகியுள்ளது. இதற்காக தனது உடலமைப்பை முழுமையாக மாற்றினார் ஆர்யா. 

படத்தில் கலையரசன், பசுபதி, சந்தோஷ், ஜான் விஜய், சஞ்சனா நடராஜன், துஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.முரளி, எடிட்டராக ஆர்.கே.செல்வா, கலை இயக்குனராக டி.ராமலிங்கம், சண்டை இயக்குனராக அன்பறிவு ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரிந்துள்ளனர். கே 9 ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

நாளை எனிமி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிறது.அரண்மனை  3 படப்பிடிப்பை முடித்த கையோடு ஆனந்த் ஷங்கர் இயக்கி வரும் இந்த படத்தில் ஆர்யா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.