அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஆர்யா.தொடர்ந்து சர்வம்,மதராசபட்டினம்,பாஸ் என்ற பாஸ்கரன்,ராஜா ராணி என ஹிட் படங்களின் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்தவர்.

Arya 30 First Schedule Completed Before Lockdown

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மகாமுனி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை அடுத்து டெடி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் ஆர்யா 30 படத்தை காலா,கபாலி,மெட்ராஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கவுள்ளார்.

Arya 30 First Schedule Completed Before Lockdown

சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.இந்த படத்தில் துஷாரா ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.இந்த படம் பாக்ஸிங் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பபடவுள்ளது.இந்த படம் குறித்த முக்கிய தகவலை கலாட்டாவுடனான பேஸ்புக் லைவ்வில் பகிர்ந்துகொண்டார் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள கலையரசன்.இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஊரடங்கிற்கு முன்னரே முடிந்துவிட்டது என்றும் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்கவிருந்த நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.நிலைமை சரியான பின்னர் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.