மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் திரைப்படமான தலைவி திரைப்படத்தை இயக்குனர் A.L.விஜய் இயக்கியுள்ளார். தலைவி திரைப்படத்தில் ஜெயலலிதா அவர்களின் கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க, நடிகர் அரவிந்த்சாமி மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் முன்னாள் அமைச்சர் R.M.வீரப்பன் கதாபாத்திரத்தில் நடிகர் சமுத்திரகனி நடிக்க  நடிகை பூர்ணா, சசிகலா கதாபாத்திரத்திலும் நடிகை மதுபாலா ஜானகி ராமச்சந்திரன் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் GV.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் விஷால் விட்டல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகியுள்ள  தலைவி திரைப்படத்தை விப்ரீ மோஷன் பிக்சர்ஸ் மற்றும் கர்மா மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்நிலையில் தற்போது தலைவி திரைப்படத்தின் புதிய Sneak Peek வீடியோ வெளியானது.

செல்வி.ஜெ.ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் எம்ஜிஆர்-ஆக அரவிந்த் சுவாமியும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் தலைவி திரைப்படம் நாளை (செப்டம்பர் 10) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது வெளியாகி உள்ள இந்த புதிய Sneak Peek வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது . அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்