தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் மாஸ்டர். இப்படத்தில், மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

master kuttykadha

படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. படத்தின் விநியோக உரிமையை செவென் ஸ்க்ரீன் ஸ்டுடியோ கைப்பற்றியுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஏப்ரல் மாதம் வெளியாகும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் முதல் சிங்கிளான ஒரு குட்டி கதை பாடல் நேற்று வெளியாகி ட்ரெண்டானது. அருண் ராஜா எழுதிய இப்பாடல் வரிகளுக்கு விஜய் குரல் தந்துள்ளார். 

arunrajakamaraj

இப்பாடல் உருவானது குறித்து கலாட்டா நேர்காணலில் நம்முடன் பகிர்ந்துள்ளார். இந்த வரிகள் அவருடைய மேடை பேச்சுகளில் இருந்து எடுக்கப்பட்டது தான். ஒரு ரசிகராக அவரது குட்டி கதைகளை கேட்ட ஆர்வமிருக்கும். அதே எதிர்பார்ப்புடன் கதைக்கு ஏற்றவாறு வரிகளை செதுக்கினேன் என்றார். உங்களுக்கும் இசையமைப்பாளர் அனிருத்திற்கு பாடலின் மூட் என்னவென்று தெரியும். நான் வரவில்லை என்று கூறினாராம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மேலும் கனா படத்தை பார்த்து விட்டு தளபதி விஜய் கூறிய விஷயத்தையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார் அருண்ராஜா காமராஜ்.