தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் அருண் விஜய் கடைசியாக துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் புருவங்களை உயர்த்திய இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளிவந்த மாஃபியா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அடுத்து இயக்குனர் சரோவ் சண்முகம் இயக்கத்தில் உருவாகும் ஓ மை டாக் திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார்.

மேலும் அகனிச்சிறகுகள், சினம், பாக்ஸர் மற்றும் பார்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் அருண் விஜய் நடிப்பில் தயாராகி விரைவில் வெளிவரவுள்ள நிலையில் அடுத்ததாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த புதிய திரைப்படத்திலும் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார்.

இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்துக்கு AV33 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இதில் அருண் விஜய் & பிரியா பவானி சங்கர் உடன் இணைந்து யோகிபாபு, பிரகாஷ்ராஜ், ராதிகா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.டிரம்ஸ்ட்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சக்திவேல் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

சமீபத்தில் படப்பிடிப்பின் போது நடிகர் அருண்விஜய்  வலது கையில் சிறிய காயம் ஏற்பட்டது. இருப்பினும், தொடர்ந்து காயத்தோடு படப்பிடிப்பில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் படப்பிடிப்பின்போது கையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arun Vijay (@arunvijayno1)