அசரவைக்கும் அருண் விஜய்யின் புதிய கெட்டப் ! வைரலாகும் புகைப்படம்
By Sakthi Priyan | Galatta | August 25, 2020 19:09 PM IST
தமிழ் சினிமாவில் பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றி கண்டவர் நடிகர் அருண் விஜய்.தனது செகண்ட் இன்னிங்ஸில் தொட்டதெல்லாம் வெற்றியாக இவருக்கு அமைந்து வருகிறது. தடம், செக்க சிவந்த வானம், மாஃபியா என ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி நடித்துள்ளார். தற்போது நவீன் இயக்கத்தில் உருவான அக்னிச் சிறகுகள் படத்தில் நடித்துள்ளார்.
தற்போது கொரோனா லாக் டவுன் காரணமாக சினிமா துறை முற்றிலும் முடங்கி இருக்கிறது. எந்த திரைப்படத்தின் ஷுட்டிங்கும் நடைபெறவில்லை என்பதால் சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தான் முடங்கி இருக்கிறார்கள். முன்னணி நடிகர்கள் இந்த காலகட்டத்தில் புது கெட்டப்புக்கு மாறி இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் அருண் விஜய் புது கெட்டப்புக்கு மாறி இருக்கிறார். அந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். ரசிகர்களை ஈர்த்தது இந்த புகைப்படம். ஹாலிவுட் திரைப்படமான வால்வரின் பட ஹீரோ போல இருக்கிறது என்று கமென்டுகளில் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
நடிகர் அருண் விஜய் சமீபத்தில் முறுக்கு மீசை வைத்து கிராமத்து கெட்டப்பில் இருக்கும் சில புகைப்படங்கள் ஒரு மாதத்திற்கு முன்பு வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி இருந்தது. அதனை பார்த்து வியந்த ரசிகர்கள் அவர் இயக்குனர் ஹரி படத்தில் அடுத்து நடிக்க தான் இப்படி கெட்டப்பை மாற்றி இருக்கிறார் என்று பேசத் துவங்கினார்கள்.
இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விவேக் இயக்கத்தில் பாக்ஸர் படத்தில் நடிக்கவிருக்கிறார் அருண்விஜய். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார். பாக்ஸர் படத்தின் கேரக்டருக்காக மலேசியா மற்றும், வியட்நாமில் சிறப்பு பயிற்சிகளை எடுத்து வந்தார் அருண் விஜய். இமான் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். கடந்த ஆண்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் அருண் விஜய்யின் உடலமைப்பு பலரையும் கவர்ந்தது. அருண் விஜய் கைவசம் சினம், அக்னிச் சிறகுகள் போன்ற படங்கள் உள்ளது.
When the going gets tough, the tough get going...💪🏼😘
New look!! 😊😉#PositiveVibesOnly #keepmoving pic.twitter.com/BBaQr9Cqpw— ArunVijay (@arunvijayno1) August 25, 2020
A.R.Rahman announces his next project - unveils the motion poster!
25/08/2020 07:00 PM
Director Hari's important statement - requests Suriya to reconsider his decision
25/08/2020 06:00 PM
This veteran actor onboard for Mani Ratnam's Ponniyin Selvan - role revealed!
25/08/2020 05:14 PM