தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் அருண்விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மாஃபியா. இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளிவந்த மாஃபியா திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் அடுத்தடுத்த திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வர தயாராகி வருகின்றன.

முன்னதாக இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகியிருக்கும் பார்டர் திரைப்படம் வருகிற நவம்பர் 19ஆம் தேதி வெளியாகிறது. தொடர்ந்து அருண்விஜய்யின் அடுத்த அதிரடியாக பாக்ஸர் மற்றும் சினம் ஆகிய திரைப்படங்கள் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கின்றன. 

மேலும் இயக்குனர் நவின் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இணைந்து நடித்துள்ள அக்னி சிறகுகள் திரைப்படம் நிறைவடைந்து விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்ததாக தயாராகிவருகிறது மாஸ் கமர்சியல் இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வரும் யானை.

இந்நிலையில் வருகிற தீபாவளி வெளியீடாக அருண் விஜய்யின் வா டீல் திரைப்படம் திரைக்கு வருகிறது. JSK ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து நடிகை கார்த்திகா நாயர், சதீஷ், வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ள வா டீல் திரைப்படத்திற்கு S.தமன் இசையமைத்துள்ளார். நவம்பர் 4-ம் தேதி வெளியாகும் வா டீல் திரைப்படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.