தமிழ் சினிமாவில் முன்னணி அதிரடி ஆக்சன் கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் அருண் விஜய் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் அறிவுரையின்படி சரியான மருத்துவ பாதுகாப்பு வசதிகளோடு வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள நடிகர் அருண்விஜய் வெகுவிரைவில் மீண்டுவர கலாட்டா குழுமம் சார்பாக வேண்டிக்கொள்கிறோம்.

முன்னதாக அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள பார்டர், ஓ மை டாக், பாக்ஸர், சினம் மற்றும் அக்னி சிறகுகள் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வரிசையாக ரிலீஸாக தயாராகி வருகின்றன. இதனிடையே தமிழ் திரை உலகின் முன்னணி கமர்ஷியல் இயக்குனரான இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் யானை.

பிரபல தயாரிப்பு நிறுவனமான டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள யானை திரைபடத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், சமுத்திரகனி, யோகிபாபு அம்மு அபிராமி மற்றும் விஜய் டிவி புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். 

சமீபத்தில் வெளிவந்த யானை திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ரசிகர்களுக்கு பொங்கலுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக யானை திரைப்படத்தின் முதல் பாடல் வருகிற ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யானையை திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.