தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகியான நடிகர் அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஓ மை டாக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தொடர்ந்து அதிரடி ஆக்சன் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் அருண் விஜய் நடிப்பில் அக்னிச்சிறகுகள், சீனம் மற்றும் பாக்ஸர் உள்ளிட்ட திரைப்படங்கள் வரிசையாக அடுத்தடுத்து ரிலீசாகவுள்ளன.

முன்னதாக இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள பார்டர் திரைப்படமும் விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில், மீண்டும் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் புதிய வெப்சீரிஸில் அருண்விஜய் நடித்து வருகிறார்.   இதனிடையே நடிகர் அருண் விஜய் நடித்துள்ள யானை திரைப்படம் வருகிற ஜூன் 17-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி கமர்சியல் இயக்குனர் ஹரி இயக்கத்தில் அதிரடியான ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக தயாராகியிருக்கும் யானை திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், சமுத்திரகனி, யோகிபாபு, அம்மு அபிராமி மற்றும் விஜய் டிவி புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள யானை திரைபடத்திற்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தற்போது யானை திரைப்படம் சென்சாருக்கு தயாராகிவிட்டதாகவும் வெகுவிரைவில் யானை திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.