தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அருண் விஜய் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸ் வருகிற ஆகஸ்ட் 19ஆம் தேதி சோனி லைவ் தளத்தில் ரிலீஸாகவுள்ளது.

தொடர்ந்து நடிகர் அருண் விஜய் நடிப்பில் அக்னிச் சிறகுகள், பார்டர், சினம் மற்றும் பாக்சர் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன. முன்னதாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த யானை திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஹிட்டானது.

யானை திரைப்படத்தில் ப்ரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், சமுத்திரகனி, யோகிபாபு, அம்மு அபிராமி மற்றும் விஜய் டிவி புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள யானை திரைபடத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். 

ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக வெளிவந்த யானை திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, யானை படக்குழுவினர் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிலையில் தற்போது யானை திரைப்படத்தின் போதைய விட்டு வாலே வீடியோ பாடல் வெளியானது. கலக்கலான போதைய விட்டு வாலே வீடியோ பாடல் இதோ…