தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் அருண் விஜய் நடித்து கடைசியாக வெளிவந்த திரைப்படம் மாஃபியா. துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் புருவங்களை உயர்த்திய இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளிவந்த மாஃபியா திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்.

மேலும் அகனிச்சிறகுகள், சினம், பாக்ஸர் மற்றும் பார்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் அருண் விஜய் நடிப்பில் தயாராகி விரைவில் வெளிவரவுள்ள நிலையில் அடுத்ததாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த புதிய திரைப்படத்திலும் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் சூப்பர்ஹிட் கமர்ஷியல் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்துக்கு அருண்விஜய் 33 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இதில் அருண் விஜய் & பிரியா பவானி சங்கர் உடன் இணைந்து யோகிபாபு, பிரகாஷ்ராஜ், ராதிகா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

டிரம்ஸ்ட்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சக்திவேல் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இராமேஸ்வரத்தில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் அந்த புகைப்படங்கள் இதோ...