தமிழ் சினிமாவில் பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றி கண்டவர் நடிகர் அருண் விஜய்.தனது செகண்ட் இன்னிங்ஸில் தொட்டதெல்லாம் வெற்றியாக இவருக்கு அமைந்து வருகிறது இவர் நடிப்பில் வெளிவந்த  தடம் படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Arun Vijay Boxer Shoot To Resume From Jan 2020

இதனை அடுத்து பாக்ஸர் ,அக்னி சிறகுகள்,சினம்,மாஃபியா என்று வரிசையாக படங்களில் நடித்து வருகிறார்.பாக்ஸர் படத்தை விவேக் இயக்குகிறார்.இந்த படத்தில் ஹீரோயினாக இறுதிசுற்று படத்தில் நடித்த ரித்திகா சிங் நடிக்கிறார்.இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது.

Arun Vijay Boxer Shoot To Resume From Jan 2020

இந்த படம் குறித்த முக்கிய தகவலை கலாட்டாவுடனான நேர்காணலில் படத்தயாரிப்பாளர் மதியழகன் தெரிவித்துள்ளார்.இந்த படத்திற்காக அருண்விஜய்யிடம் 4 மாதங்கள் கால்ஷீட் கேட்டுள்ளதாகவும்,தற்போது வேறு படங்களில் பிஸியாக இருக்கும் அருண்விஜய் பாக்ஸர் படத்தின் ஷூட்டிங்கை ஜனவரி 2020-ல் இருந்து தொடங்குவார் என்ற தகவலை தெரிவித்தார். 

Arun Vijay Boxer Shoot To Resume From Jan 2020