தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அருண் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு (2022) வெளிவந்த ஓ மை டாக் மற்றும் யானை ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இதனையடுத்து முதல் முறை வெப் சீரிஸில் களமிறங்கிய அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழ் ராக்கர்ஸ் கவனத்தை ஈர்த்தது.

கடைசியாக அருண் விஜய் காவல்துறை அதிகாரியாக நடித்த சினம் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகிய நிலையில், அடுத்தடுத்து பார்டர் மற்றும் அக்னிச் சிறகுகள் ஆகிய திரைப்படங்கள் விரைவில் ரிலீசாக காத்திருக்கின்றன. இதனிடையே அடுத்ததாக இயக்குனர் AL.விஜய் உடன் கை கோர்க்கிறார் அருண் விஜய்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் AL.விஜய், மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் திரைப்படமாக வெளிவந்த தலைவி திரைப்படத்திற்கு பிறகு இயக்கும் அச்சம் என்பது இல்லையே திரைப்படத்தில் எமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

ஸ்ரீ சீரடி சாய் மூவிஸ் மற்றும் நியூ மார்ச் ஃபர்ஸ்ட் பிக்சர்ஸ் இணைந்து வழங்கும் அச்சம் என்பது இல்லையே படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கப்படும் அச்சம் என்பது இல்லையே திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Happy to compose the tunes for #AchchamEnbathuIllaye Directed by my favourite #Vijay Starring @arunvijayno1 @iamAmyJackson @NimishaSajayan
The fearless Journey Begins!#அச்சம்என்பதுஇல்லையே

Prod by @SSSMOffl Rajashekar & Swathi@DoneChannel1 @shiyamjack pic.twitter.com/2cqjxXwAFO

— G.V.Prakash Kumar (@gvprakash) October 5, 2022