தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அருள்நிதி அடுத்ததாக ராட்சசி திரைப்படத்தின் இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். முதல் முறையாக பெரிய மீசையுடன் அட்டகாசமான கெட்டப்பில் அருள்நிதி இப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இயக்குனர் இன்னிசை பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள த்ரில்லர் திரைப்படமான டைரி திரைப்படம் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடவிரைவில் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இதனிடையே இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள தேஜாவு திரைப்படம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸானது. 

ஒயிட் கார்பட் பிலிம்ஸ் மற்றும் பி.ஜி.மீடியா வொர்க்ஸ் இணைந்து தயாரித்துள்ள தேஜாவு படத்தில் அருள்நிதி உடன் இணைந்து மதுபாலா, ஸ்மிருதி வெங்கட், அச்சுத் விஜய், சேத்தன், மைம் கோபி மற்றும் காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள தேஜாவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

க்ரைம் த்ரில்லர் படமாக வெளிவந்துள்ள தேஜாவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அருள்நிதியின் தேஜாவு திரைப்படத்தில் இருந்து விறுவிறுப்பான Sneak Peek வீடியோ தற்போது வெளியானது. பலரது கவனத்தை ஈர்த்த விறுவிறுப்பான அந்த Sneak Peek வீடியோ இதோ…