ஒவ்வொரு படத்திலும் தனது வித்தியாசமான கதைதேர்வினால் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் அருள்நிதி.தொடர்ந்து தரமான படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளார் அருள்நிதி.

வம்சம்,மௌன குரு,டிமான்டி காலனி,ஆராது சினம்,கே 13 என்று வரிசையாக இவர் நடித்த பல படங்கள் சூப்பர்ஹிட் அடித்திருந்தன.கடைசியாக ஜீவாவுடன் இணைந்து இவர் நடித்த தேஜாவு படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் டைரி படத்தில் நடித்துள்ளார்.இன்னாசி பாண்டியன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.பவித்ரா மாரிமுத்து இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.மாயா,கேம் ஓவர் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ரான் ஏதன் யோஹன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை பிரபல தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளனர் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.