ஒவ்வொரு படத்திலும் தனது வித்தியாசமான கதைதேர்வினால் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் அருள்நிதி.தொடர்ந்து தரமான படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளார் அருள்நிதி.

வம்சம்,மௌன குரு,டிமான்டி காலனி,ஆராது சினம்,கே 13 என்று வரிசையாக இவர் நடித்த பல படங்கள் சூப்பர்ஹிட் அடித்திருந்தன.கடைசியாக ஜீவாவுடன் இணைந்து இவர் நடித்த களத்தில் சந்திப்போம் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் டைரி படத்தில் நடித்துள்ளார்.இன்னாசி பாண்டியன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.பவித்ரா மாரிமுத்து இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.மாயா,கேம் ஓவர் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ரான் ஏதன் யோஹன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீஸரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்,விறுவிறுப்பான இந்த டீஸர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் டீஸரை கீழே உள்ள லிங்கில் காணலாம்