விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி கடந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிகில்.ஏ.ஜி.எஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

Archana Kalpathi Reply on Bigil 20 Crores Loss

பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் கதிர்,நயன்தாரா,விவேக்,யோகி பாபு,இந்துஜா,அமிர்தா ஐயர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Archana Kalpathi Reply on Bigil 20 Crores Loss

இந்த படம் 20 கோடி ரூபாய் வரை நஷ்டமடைந்துள்ளதாக தயாரிப்பாளர் தங்களிடம் தெரிவித்ததாக பிரபல ஹிந்தி மீடியா ஒன்று பகிர்ந்திருந்தது.இதற்கு பதிலளித்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அப்படி தான் எந்த மீடியாவிற்கும் பேட்டி அளிக்கவில்லை என்றும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.