1994-ம் ஆண்டு வால்ட் டிஸ்னி தயாரிப்பில் வெளியான அனிமேஷன் திரைப்படம் தி லயன் கிங். 25 ஆண்டுகள் கழித்து, இந்தப் படத்தை நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி லைவ் ஆக்‌ஷன் அனிமேஷன் முறையில் தயாராக்கி வழங்கியுள்ளனர். புகழ் பெற்ற இயக்குனர் ஜான் ஃபேவரூ இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழில் வெளியான இப்படத்திற்கு அரவிந்த்சாமி, சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், ரோகிணி, சிங்கம் புலி, மனோபாலா, ரோபோ சங்கர் ஆகியோர் பின்னணி குரல் கொடுத்துள்ளனர். மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார். 

Aravind Swamy Dubbing For The Lion King Aravind Swamy Dubbing For The Lion King

காட்டை ஆளும் முஃபாசா எனும் சிங்கத்தின் மகனாக வரும் சிம்பா, தனது சித்தப்பாவான ஸ்காரின் கொடிய பிடியிலிருந்து தப்பித்து மீண்டும் காட்டிற்கு எப்படி அரசனாகிறார் என்பது தான் இப்படத்தின் கதைக்கரு. கருணையற்ற மனதுடன் இரையைத் தேடி அலையும் கழுதப்புலி கூட்டத்துடன் சேர்ந்து ராஜ்ஜியத்தை ஸ்கார் கைப்பற்றுகிறதா ? அல்லது சிம்பாவுக்கு சவால் விடுகிறதா என்பது கதை நகர நகர தெரியவருகிறது.

Aravind Swamy Dubbing For The Lion King Aravind Swamy Dubbing For The Lion King

படத்தில் வரும் வில்லன் ஸ்கார் எனும் பாத்திரத்திற்கு அரவிந்த் சாமி குரல் தந்துள்ளார். தற்போது இந்த டப்பிங் வீடியோ வெளியானது.